புதிய அமைப்பு ஒன்றை தொடங்கினார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரெஹ்மான்

புதிய அமைப்பு ஒன்றை தொடங்கினார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரெஹ்மான் 1

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவர் ‘த பியூச்சர்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த அமைப்பு பற்றி அவர் அளித்த பேட்டியில், ‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தக்கால குழந்தைகள் யு டியூப் வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றனர்.

விளம்பரம்

இந்த நிலையில் அவர்களுக்கு யூ டியூப் மூலம் நமது பண்பாடு, கலாச்சாரம், நற்பண்புகள் ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் பணி இந்த அமைப்பு மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்து, அவர்களை இசை வழியாக நல்வழிப்படுத்த முயற்சிப்போம். இயக்குனர் பரத் பாலா, எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் என்னுடன் கைகோர்த்துள்ளனர்’ என்று கூறியுள்ளார் .

விளம்பரம்

Leave a Comment