ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்!

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம்வந்துகொண்டு இருக்கிறார். கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் ‘டகால்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்! 1
சந்தானம்

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விளம்பரம்

அதே தினத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment