திமுகவும்,காங்கிரசும் இணைந்த கைகள்: அழகிரி

காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தியை சந்தித்த கே.எஸ்.அழகிரி திமுகவும்,காங்கிரசும் இணைந்த கைகள் எனவும் பிளவு ஏற்பட வாய்ப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலையடுத்து திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஆலோசிக்கவில்லை எனவும், குறைவான தொகுதிகளை கொடுத்து கூட்டணி கட்சிகளை ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்தது.

விளம்பரம்
திமுகவும்,காங்கிரசும் இணைந்த கைகள்: அழகிரி 1
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது திமுகவின் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தான். இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்து வெளியிட்ட திமுக, காங்கிரசை தனித்து விட்டது.

அதன் பின்னர் இரு கட்சிகளின் மாவட்ட செயலாளர்களுக்கும் பேசி தொகுதியை பிரித்துக்கொண்டனர். இதேநிலை தான் அனைத்து தொகுதிகளிலும் நிகழ்ந்தன.

விளம்பரம்

தேர்தல் முடிவு வெளியான பின்னர், காங்கிரசிற்கு தலைவர், துணை தலைவர் பதவிகள் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாகவே குற்றம் சாட்டினார். இதனையே பா.சிதம்பரமும் ஆமோதிக்க உரசல் அதிகமானது.

தொடர்புடையவை  அமெரிக்கா இரானுப்படையை பயங்கரவாதம் அமைப்பென அறிவிப்பு!

இருப்பினும், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 3 யூனியன் தலைவர் பதவிகளை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி பலத்தில் 2 யூனியன் தலைவர் பதவிகளை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் கேட்ட படி 20 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

விளம்பரம்

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று காங்கிரஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய கட்சியான திமுக பங்கேற்காதது தேசிய அளவில் விவாதமாக மாறிவிட்டது.

விவகாரம் பெரியதாகியதும், இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்தார். அப்போது தி.மு.க.வுடனான பிரச்சனை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விளம்பரம்

அதில், திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து சோனியாவுடன் பேசப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கை குறித்து சோனியா காந்தி எதுவும் கேட்கவில்லை அரசியலில் என்ன நடக்கும் என ஆரூடம் கூற முடியாது.

 திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள். இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment