மலேசியா பாமாயில்: வர்த்தகம் நிறுத்தம்

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு மலேசியா அரசு விமர்சனம் செய்ததை அடுத்து அந்நாட்டியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமயில் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசு குறித்து மலேசிய பிரதமர் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு கடந்த வாரம் எச்சரிக்கை அனுப்பியது.

விளம்பரம்
மலேசியா பாமாயில்: வர்த்தகம் நிறுத்தம் 1
மலேசியா பாமாயில்

காஷ்மீர் விவகாரம் மற்றும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம்தொடர்பாக மலேசிய பிரதமர் கடுமையான கருத்து தெரிவித்திருந்ததை தொடர்ந்து மத்திய அரசு இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது.

மலேசியாவிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, தனது இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால் அது மலேசியாவுக்கு பெரும் நெருக்குதலாக அமையும்.

விளம்பரம்

பாமாயிலைப்பொருத்தமட்டில் மலேசியாதான் விலையை நிர்ணயிக்கும் நாடாக உள்ளது. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து 90 லட்சம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதிசெய்கிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் கச்சா பாமாயில்ஒரு டன் விலை 800 டாலராகும்.

இதை 810 டாலருக்கு இந்தோனேசியாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்கின்றன. இதனால் இந்தியாவிற்கு சுமார் 675 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment