இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு!

இந்தியாவில் 70 சதவிகித ஏழைகளை விடவும் 1 சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்து இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! 1
இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்ற தாழ்வு

உலகம் முழுவதும் பொருளாதார ரீதியான ஏற்ற தாழ்வு அதிகரித்து வருகிறது. இதனை ஒழிக்க உலக நாடுகள் எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் கட்டி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொருளாதரம் முழுக்க ஒரு சிலரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும் அபாயம் இருக்கிறது.

விளம்பரம்

இந்நிலையில், ஆக்ஸ்பார்ம் உரிமைகள் எனப்படும் குழுவின் ‘டைம் டு கேர்’ என்ற ஆய்வினை உலக பொருளாதார மன்றத்தின் 50வைத்து ஆண்டு கூட்டத்தில் வெளியிட்டது.

அதில், உலகில் உள்ள 2,153 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவிகித ஏழை மக்களின் மொத்த சொத்து மதிப்பினை காட்டிலும் அதிமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

விளம்பரம்

இந்த 60 சதவிகிதம் என்பது சுமார் 460 கோடி மக்கள் எனப்படும்.

மேலும் இந்த ஆய்வில், 63 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தியாவின் கடந்த 2018-19ஆம் ஆண்டின் பட்ஜெட் தொகையான ரூ.24,42,200 கோடியை காட்டிலும் அதிமாக இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment