இந்திய பொருளாதாரத்திற்கு முதலீடு அவசியம்: கீதா

பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்தியா மீளவேண்டும் என்றால் அதிகளவிலான முதலீடுகள் தேவை என உலக நாணய நிதியத்தின் மூத்த ஆலோசகரான கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

geetha gopinath
கீதா கோபிநாத்

இந்திய பொருளாதாரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார் கீதா கோபிநாத். முன்னதாக அவர், இந்தியா வளர்ச்சி பெற வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், கிராமப்புறங்களில் குறைந்து போய்யுள்ள நுகர்வு தன்மையை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.

விளம்பரம்

தற்போது அவர் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ” இந்தியா போன்றதொரு நாட்டுக்கு இப்போது அதிக முதலீடுகள் தேவை. அதிக முதலீட்டை ஈர்த்தால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

நுகர்வுச் செலவுகள் குறைவாக இருப்பதால் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதற்கு முதலீடுகள் தேவை” என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகவும், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. அதோடு, இந்த முழு நிதியாண்டிலும் 4.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது.

தொடர்புடையவை  மொத்த விலை பணவீக்கம் உயர்வு!

நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீதா கோபிநாத், “உலகத்தின் மொத்த பொருளாதாரத்தையும் பின்னுக்கு இழுத்து செல்வது இந்தியா தான்.

விளம்பரம்

உலக பொருளாதார மந்தநிலைக்கு இந்தியா 80 சதவிகிதம் பங்களிக்கிறது” என்றும் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment