இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து விமர்சிக்கும் கீதா கோபிநாத்தின் மீது மத்திய அமைச்சர்கள் தாக்குதலை நடத்தலாம் என பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பொருளாதர மந்தநிலைக்கு முக்கிய காரணமே நிதி துறையில் உள்ள பிரச்சனை தான் என கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார ஆலோசகரான கீதா கோபிநாத் கூறினார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தைக் குறித்து பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். இதனால் பாஜக அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இதுமட்டுமின்றி இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சியை 6 சதவிகிதமாக இருக்குமென கணிக்கப்பட்டிருந்தது. இதே நிலை நீடித்தால் 5 சதவிகிதத்திற்கு கீழே சென்று விடுமெனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது இதனை சுட்டி காட்டி கருத்து கூறியுள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்குள், அதாவது 4.8 சதவீதமாக குறைந்திருப்பதாக ஐ.எம்.எப் கூறியுள்ளது. இதுவே சில கணக்குகளை சரிகட்டித்தான் வந்திருக்கும் என்று நான் கருதுகிறேன்.
எனவே, அதற்கும் கீழ் வளர்ச்சி விகிதம் போனால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஐ.எம்.எப். தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், தான் முதன்முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறியவர்.
இப்போது வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களை அறிவித்ததற்காக அவரும், ஐ.எம்.எப். அமைப்பும், அரசாங்க அமைச்சர்களின் தாக்குதல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என பாஜக அரசை கிண்டலடித்துள்ளார்.