நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் 1
ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள்

மோடி தலைமையிலான பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் பல்வேறு சர்ச்சையான விவகாரங்களை சிக்கி வருகிறது.

விளம்பரம்

குறிப்பாக புதிய கல்வி கொள்கை திட்டம், குழந்தை தொழிலாளர்கள் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது 2ஆம் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment