
பாகுபலி படத்தில் நடித்த ஜோடி பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலித்து வந்தனர் என்றும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்த 2 வருடத்திற்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் கிசுகிசுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போதெல்லாம், இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் பலமுறை கூறி உள்ளனர். ஆனால், ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இருவரிடமும் உள்ள உறவு ஒருபடிமேல் தான் என்று கூறி இருவர் பெயரையும் இணைத்து. ‘பிரனுஷக்கா’ என குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது அனுஷ்கா வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
அவரைத்தான் அனுஷ்கா திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார் என்று திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை மனம்முடிப்பது ஏற்கனவே நடந்திருக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த காதல் கிசுகிசு உண்மையாக இருக்குமா என்று கேட்கத் தொடங்கி உள்ளனர்.ஆனால் அனுஷ்காவிடம் இருந்து இதுபற்றி பதில் ஏதும் வராமல் உள்ளது.