என் குடும்பமே நிலை குலைஞ்சு போச்சு..! உடல் நடுங்க வீடியோ வெளியிட்டு கதறி அழுத மாதேஷ்..!

வெளியிட்டது

பிரபல தனியார் செய்தி ஊடகவியலாளராக இருந்த மாதேஷ் தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டு கதறி அழுது இருக்கிறார். தனது குடும்பம் நிலை குலைந்து போய்விட்டதாகவும், தனது பத்திரிக்கை வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டதாகவும் அவர் கையெடுத்து கும்பிட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். மேலும் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்னுடைய தவறை திருத்திக் கொள்கிறேன் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிரபல செய்தியாளராக இருந்த மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆபரேஷன் என்கிற பெயரில் பல youtube அரசியல் நெறியாளர்கள் பற்றி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியினரிடம் பணம் பெற்றுக் கொண்டு மற்றவர்களை தாழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். மேலும் அதை மறைத்து வைத்திருக்கும் கேமராக்களில் வீடியோவாகவும் எடுத்து ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் குடும்பமே நிலை குலைஞ்சு போச்சு..! உடல் நடுங்க வீடியோ வெளியிட்டு கதறி அழுத மாதேஷ்..! 1
அதில் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார், ரவீந்திரன் துரைசாமி போன்ற பலர் வீடியோக்களில் இருந்தனர். பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்திக் கொண்டும் அவர்கள் பேசுவது போன்ற அந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் நெட்டிசன்கள் கிழித்து தொங்க விட ஆரம்பித்தனர். இந்த பிரச்சனை பூதாகரமான நிலையில் ஒவ்வொருவராக தன்னிலை விளக்கம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாதேஷ் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தான் வேலை பார்த்து வரும் கம்பெனி நிர்வாகத்திற்கு தெரியாமல் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரின் அறிவுரையின் பேரில் பிசினஸ் என்ற ரீதியில் தான் நான் அந்த இடத்திற்கு சென்றேன்.ஆனால் இது இப்படியாக மாறிப் போகும் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை் இதனால் எனது குடும்பம் நிலைகுலைந்து போய்விட்டது. எனது பத்திரிக்கை வாழ்க்கையும் இத்துடன் முடிந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.


சில நாட்களாக என்னால் இதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. கடந்த நான்கு நாட்களாக நான் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போய் விட்டேன். நான் நினைத்து சென்றது எதற்காகவோ, ஆனால் அது இப்படியாக மாறிவிட்டது. சில தலைவர்கள் பற்றியே நான் மிகைப்படுத்தி கூறியது தவறுதான். எப்படியாவது அந்த பிசினஸை பிடித்து விட வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு செய்தேன். மதன் ரவிச்சந்திரன் தாய் தகப்பன் பற்றி நான் ஒருமையில் பேசியது தவறுதான். எல்லாவற்றிற்கும் என்னை மன்னித்து விடுங்கள். இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் அதை திருத்திக்கொள்கிறேன். எனது மகன் வளர்ந்து youtubeல் மாதேஷ் என்று தேடினால் இப்படியான வீடியோக்களை பார்க்க கூடாது என்று நான் நினைக்கின்றேன். அதனால் மீண்டும் ஒருமுறை உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி கைகூப்பி உடல் நடுங்க கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்