தன்னுடைய வெற்றியை தல அஜித்துக்கு சமர்ப்பிப்பதாக ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது கூறியிருக்கிறார். “உன்னால் முடியும், நீ பெரிய படத்தை இயக்கு என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அஜீத் தான், எனவே இந்த வெற்றியை நான் அஜித்குமாருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், படத்தின் கதையை கேட்டதுமே நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் விஷாலுக்கு நன்றி. நான் இயக்கிய இரண்டாவது படத்தில் தோல்வியிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்று தினமும் நினைப்பதுண்டு .அந்த தோல்வியிலிருந்து மீண்டு வர எனக்கு இந்த படம் உதவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியை எஸ் ஜே சூர்யாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் எப்போதும் ஓய்வெடுக்கவே மாட்டார். அர்ப்பணிப்புள்ள கலைஞர் அவர். எஸ் ஜே சூர்யாவிடம் மட்டும் எட்டரை மணி நேரம் கதை சொன்னேன். அப்படி என்றால் அவர் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப்பார் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இங்கு இருப்பவர்களுக்கு நான் என்னுடைய படத்தின் வெற்றியை சமர்ப்பித்து விட்டேன். எனக்கான தனிப்பட்ட வெற்றியை நான் அஜித் குமார் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். மேற்கொண்ட பார்வை படத்தின் போது நான் அவரை சந்தித்தேன். அவர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தார். “உன்னால் முடியும், நீ பெரிய படத்தை இயக்கு” என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். எனவே எனக்கான வெற்றியை நான் அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பேசினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அடுத்ததாக அவர் விஷால், எஸ் ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஐந்து நாள் முடிவில் இந்த திரைப்படம் ரூ.11 கோடி வசூலை இந்திய அளவில் ரூ.65 கோடி வசூலை உலக அளவிலும் பெற்று இருந்ததாக இந்த படத்தை தயாரித்த எஸ் வினோத்குமார் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Youtube Video Embed Code Credits: Bingoo Box