பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தற்போது ஒரு சிறிய வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நந்தினியை ஆதித்த கரிகாலன் நேரில் சந்திக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்துவதற்காக சின்னஞ்சிறு நிலவே என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் அந்த பாடலின் வீடியோ காட்சியிலிருந்து ஒரு நிமிட வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நந்தினியை ஆதித்த கரிகாலன் சந்திக்கிறார். அப்போது அவருக்கு நந்தினியுடன் பழகிய பழைய நாட்கள் நினைவுக்கு வருகிறது. ஆழ்வார்கடியான் நம்பினியின் சகோதரியாக தஞ்சாவூரின் அரண்மனைக்கு அடிக்கடி வந்து செல்பவர் நந்தினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பரம விஷ்ணு பக்தனாக இருக்கும் ஆழ்வார்கடியானின் குடும்பத்தின் தோட்டத்தில் ஒரு நாள் ஒரு பெண் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. அங்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அழகே உருவாய் ஒரு குழந்தை கிடப்பது தெரிந்து அதை எடுத்து வளர்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த குழந்தை வளர்ந்து பருவத்தை அடைகிறது. அப்போது இளவரசராக இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு அந்த குழந்தை மீது காதல் மலர்கிறது. இப்படியாக சிறுவயதில் ஆதித்த கரிகாலனும் நந்தினியும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்கின்றனர். பின்னர் ஒரு நாள் ஆதித்த கரிகாலன் பாண்டியர்களை தேடி தேடி வேட்டையாடிய பொழுது, வீரபாண்டியனின் குடிலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வீரபாண்டியனுக்கு அருகில் நந்தினி அமர்ந்திருக்கிறார். அதை பார்த்த பின்பு ஆதித்த கரிகாலன் மனம் உடைந்து போகிறான். இனி நந்தினியை பார்க்கவே கூடாது என்கிற எண்ணத்தில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் நோக்கி சென்று அங்கு தனது படைகளுடன் தங்கி இருக்கிறான் ஆதித்த கரிகாலன்.
இதற்கிடையில் நந்தினி பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்டு தற்போது தஞ்சாவூர் அரண்மனையிலேயே வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்த பின்பு ஒரு முறை கூட ஆதித்த கரிகாலனை சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் அருள்மொழி வர்மரை கடல் கொண்டு விட்டது என்று சொல்லி தஞ்சாவூர் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு தளபதிகளாக இருந்த பழுவேட்டரையர்கள் தான் காரணம் என்று பிரச்சனை கிளம்புகிறது. இதனால் கடம்பூர் மாளிகைக்கு பெரிய பழுவேட்டரையர் மற்றும் அவரது பரிவாரங்கள் கிளம்பி செல்கின்றனர். கடம்பூர் அரண்மனைக்கு வருமாறு காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆதித்த கரிகாலனுக்கு நந்தினி ஓலை அனுப்புகிறார். இதனால் காஞ்சிபுரத்திலிருந்து கடம்பூருக்கு வருகிறார் ஆதித்த கரிகாலன் அப்போது முதல் முறையாக நீண்ட இடைவெளிக்குப் பின்பு. நந்தினியை சந்திக்கிறார் அப்போது அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் வருகிறது. அதை சின்னஞ்சிறு நிலவே என்கிற பாடலாக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது அந்த வீடியோ பாடலின் சிறு பகுதியை ப்ரோமோ போல வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tips Tamil