கெளதம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சூர்யா, மஹா.! மாட்டப் போறாங்க ரெண்டு பேரும்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கௌதம் மற்றும் ஐஸ்வர்யா இருவர் இருக்கும் இடத்தை தேடி சூர்யா மற்றும் மஹா இருவரும் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் கௌதமும் ஐஸ்வர்யாவும் மாட்டுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மனங்களில் இடம் பெற்று இருக்கும் ஒரு தொடர் தான் ஆஹா கல்யாணம். இந்த தொடரில் கோடீஸ்வரிக்கு ஐஸ்வர்யா, மஹா, பிரபா என்று மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பணக்கார வீட்டு பையனாக இருக்கும் சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். தான் பெரிய பணக்காரர் என்று பொய் சொல்லி கோடீஸ்வரி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கெளதம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சூர்யா, மஹா.! மாட்டப் போறாங்க ரெண்டு பேரும்.! 1

 

ஆனால் உண்மையில் கோடீஸ்வரி பெரிய பணக்காரர் எதுவும் இல்லை. இதற்கிடையில் சூர்யாவின் சித்தி மகனாக இருக்கும் கௌதம் ஐஸ்வர்யாவை தனது காதல் வலையில் விழ வைக்கிறார். ஐஸ்வர்யாவை பணக்காரி என்ற நம்பிக்கை கொண்டு அவர் இதுபோல் செய்கிறார். பின்னர் சூர்யா ஐஸ்வர்யா திருமணத்தன்று ஐஸ்வர்யாவை கடத்திக் கொண்டும் சென்று விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் ஐஸ்வர்யாவின் இரண்டாவது தங்கை மஹாவை சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அதன் பின்னர் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஐஸ்வர்யா ஓடிப் போனதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தான் நிரூபிக்க தயார் என்று மஹா சூர்யாவிடம் சபதம் போட்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவும் கௌதமும் பார்க்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதை ஐஸ்வர்யாவின் கடைசி தங்கையாக இருக்கும் பிரபா மஹாவிற்கு போன் செய்து சொல்கிறார். உடனே மஹாவும் சூர்யாவை அழைத்துக் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வருகின்றனர். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. விரைவில் இவர்கள் இருவரும் சூர்யாவிடம் மாட்டி அடி வாங்க போவது உறுதி என்று தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்