சூர்யாவிடம் கையும் களவுமாக மாட்டிய கெளதம் ஐஸ்வர்யா.! இனிமே தான் இருக்கு கச்சேரி.!

வெளியிட்டது

ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது கௌதம் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இருக்கும் இடத்தை தேடி மகா மற்றும் சூர்யா இருவரும் வந்துவிட்டனர். இதை பார்த்த கௌதம் தற்போது ஐஸ்வர்யாவை அங்கிருந்து கிளம்புமாறு கூறிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த சூர்நா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு தற்போது கிளம்பி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடரில் தற்போது கௌதம் மாட்டுவானா இல்லையா என்பது குறித்த பரபரப்பு எழுந்திருக்கிறது. தனது அண்ணன் சூர்யாவிற்கு பார்த்த ஐஸ்வர்யா என்ற பெண் பணக்காரர் என நினைத்துக் கொண்டு அவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு கடத்தி விடுகிறார். இதனால் சூர்யாவிற்கும் ஐஸ்வர்யாவின் தங்கை மஹாவிற்கும் திருமணம் நடக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவிடம் கையும் களவுமாக மாட்டிய கெளதம் ஐஸ்வர்யா.! இனிமே தான் இருக்கு கச்சேரி.! 1

ஆனால் சூர்யாவிற்கு மஹா மீது துளியும் விருப்பமில்லை. மேலும் பணக்கார வீட்டுப் பெண் என்று ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதால் சூர்யாவின் தாயாரும் மஹா மிகுந்த கோபத்தில் இருக்கிறார். இதற்கிடையே மஹா தனக்கும் தனது அக்கா ஓடிப்போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக சூர்யாவிடம் கூறுகிறார். இதை நம்பும் சூர்யா தற்போது மஹாவுக்கு கால அவகாசமும் கொடுத்திருக்கிறார். தற்போது சூர்யாவின் தம்பி கௌதமும் மஹாவின் அக்கா ஐஸ்வர்யாவும் பார்க்கில் அமர்ந்து கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் மஹாவின் கடைசி தங்கை மகாவிற்கு ஃபோன் செய்து கூறுகிறார். இதனால் சூர்யாவை அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் பூங்காவிற்கு வருகிறார் மஹா.

தற்போது மஹாவும் சூர்யாவும் வருவதை பார்த்த கௌதம் ஐஸ்வர்யாவை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார். ஆனால் நான் எதற்காக செல்ல வேண்டும் நான் போக மாட்டேன் என்று ஐஸ்வர்யா அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். நீ என்னை நம்புவராக இருந்தால் இப்போதே இங்கிருந்து சென்று விடு என்று கௌதம் ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. கௌதம் கையும் களவுமாக மாட்டுவானா இல்லை வழக்கம் போல் ஏதாவது சொல்லி தப்பித்து விடுவானா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்