விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மஹாவின் தந்தை தசரதன் தான் வாழ்ந்து வந்த வீட்டை மிகவும் குறைந்த விலைக்கு ஒருவரிடம் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நேரம் பார்த்து வரும் மஹா தன்னுடைய சொந்த பணத்தை எடுத்துக் கொடுத்து வீட்டை விற்பதை தடுத்து நிறுத்துகிறார். இதனால் தசரதன் கோடீஸ்வரி மற்றும் பிரபா என அனைவரும் மஹாவை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேட்டு ஒருவரிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தசரதன் தவித்து வருகிறார். இதற்காக அவர் தான் வாழ்ந்து வரும் வீட்டை விற்று விட முடிவெடுக்கிறார். பல லட்சம் மதிப்புள்ள அந்த வீடு பழைய வீடு என்று சொல்லி 20 லட்சம் மட்டுமே தர முடியும் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர். இருப்பினும் பணத் தேவை இருப்பதால் 20 லட்சத்திற்கு வீட்டை விற்க தசரதன் முடிவு செய்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டை வாங்குவதற்காக ஆட்கள் வருகின்றனர். தற்போது பத்து லட்ச ரூபாய் எடுத்து வந்திருப்பதாக கூறி ஒரு பத்திரத்தில் கையெழுத்து போட கூறுகின்றனர்.
தற்போது அந்த சமயம் பார்த்து அங்கு வரும் மஹா தன்னிடம் இருந்த காசை வட்டியாக கொடுத்து வீட்டை காப்பாற்றி கொடுக்கிறார். மேலும் 6 மாதத்தில் அனைத்து பணத்தையும் திருப்பி செலுத்துவதாக கூறுகிறார். இதனால் தசரதன், கோடீஸ்வரி என அனைவரும் மஹாவை கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television