விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தனது தாய் தந்தையரின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மஹா பொம்மை செய்யும் பணிகளுக்காக களிமண் மிதிக்கும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதை ஒருவர் மறைமுகமாக வீடியோ எடுத்து தொலைக்காட்சிகளில் பரவ விட சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி இந்த வீடியோவை பார்த்து கோபத்தில் கொந்தளிக்கிறார். “எங்கள் குடும்ப மானத்தை வாங்குவதற்காகவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாயா?” என்று சொல்லி மஹாவை அசிங்கப்படுத்துகிறார். இதனால் மஹாவும் மிகவும் அவமானமாக உணர்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் மஹாவின் தாய் தந்தையரின் வீட்டை வட்டி கொடுக்க முடியாததால் சேட்டு எழுதி வாங்க நினைக்கிறார். ஆனால் சரியான சமயத்தில் சூர்யாவின் கம்பெனிக்கு டிசைன் செய்து கொடுத்து அந்த பணத்தை கொண்டு வந்து தனது தாய் தந்தையரிடம் கொடுக்கிறார் மஹா. மேலும் அவர்களின் பொம்மை செய்யும் தொழிலுக்காக களிமண்ணை மிதித்து அவர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்த ஒருவர் செய்தி தொலைக்காட்சிகளில் பரவ விடுகிறார். வேதாச்சலம் குடும்பத்தின் மருமகளாக இருக்கும் மஹா தனது தாய் தந்தையரின் தொழிலுக்காக மண்ணை மிதித்துக் கொண்டிருக்கிறார் என்று செய்திகளில் ஒளிபரப்பாக தொடங்கியதை பார்த்த மஹாவின் மாமியார்ராஜலட்சுமி கோபத்தில் உறைகிறார்.
பின்னர் வீட்டிற்கு வந்த மஹாவிடம் ராஜலட்சுமி “எங்கள் குடும்பத்தின் மானத்தை வாங்குவதற்காகவே நீ இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்ட எதுவும் புரியாமல் மஹா முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது போனை அவரிடம் காட்டி செய்திகளில் வந்த வீடியோவை காண்பிக்கின்றனர். இதனால் மஹா கண்ணீருடன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அவருக்கு சூர்யா கண்டிப்பாக ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television