விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மஹா அவரின் தாய் தந்தையரின் பொம்மை செய்யும் தொழிலுக்கு உதவி செய்து வருகிறார். அவரை போகவிடாமல் தடுப்பதற்காக மஹா நடந்து வரும் பாதையில் எண்ணெயை ஊற்றி வைக்கிறார் சூர்யா. ஆனால் அதை கண்டுபிடிக்கும் மஹா, சூர்யாவை பிளாக்மெயில் செய்து தனது தாயின் பொம்மை தொழிலுக்கு அவரையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவின் தாய் தந்தையர் மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் அவர்கள் வீடு அடகில் மூழ்கிப் போகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து தாய் தந்தையைக் காப்பாற்ற மஹா மீண்டும் பொம்மை தொழிலில் இறங்குகிறார். இதை பார்க்கும் மஹாவின் கணவர் சூர்யா, மஹாவை எப்படியாவது அங்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என நினைத்து, அவர் நடந்து வரும் வழியில் எண்ணெயை ஊற்றி வைக்கிறார். ஆனால் அதை மறைமுகமாக கேமரா மூலம் வீடியோவாக எடுத்து வைத்து மஹா சூர்யாவை மிரட்டத் தொடங்குகிறார்.
மேலும் நீங்களும் என்னுடன் வந்து பொம்மை தொழிலுக்கு மண் மிதிக்க வேண்டும் என்று சொல்லி சூர்யாவை அழைத்துக் கொண்டு போய் மண்ணை மிதிக்க வைக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஒரு ஊடல் ஏற்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television