மஹாவை ஓங்கி ஒரு அறை விட்ட சூர்யா.! சூர்யா – மஹாவுக்கு நடுவே விழுந்த விரிசல்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராஜலட்சுமியை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கும் மஹாவை தற்போது சூர்யா கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது கதைப்படி சூர்யாவின் மனைவியாக இருக்கும் மஹா பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபடுகிறார். அவர் தனது கணவர் சூர்யாவையும் அழைத்துக் கொண்டு பொம்மை தொழிலுக்கு தேவையான மண் மிதிக்கும் தொழிலில் ஈடுபட வைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவை ஓங்கி ஒரு அறை விட்ட சூர்யா.! சூர்யா - மஹாவுக்கு நடுவே விழுந்த விரிசல்.! ப்ரோமோ இதோ.! 1

ஆனால் சிலர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிடுகின்றனர். இந்த வீடியோவைப் பார்க்கும் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி தற்போது மஹாவிடம் கோபமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். “சூர்யா எவ்வளவு பெரிய கம்பெனியின் முதலாளி? அவனை போய் இப்படி மண் மிதிக்க வைத்து விட்டாயே?” என்று சொல்லி மஹாவிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பதிலுக்கு மஹா, “எந்த ஒரு அம்மாவாக இருந்தாலும் தன் பையன் குழந்தை குட்டியுடன் வாழத்தான் விரும்புவார், ஆனால் நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?” என்று ராஜலட்சுமியைப் பார்த்து கத்திக் கொண்டிருக்கிறார். ராஜலட்சுமி பதில் எதுவும் பேச முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து உள்ளே வரும் சூர்யா மஹா பேசுவதைப் கேட்டு மிகுந்த கோபம் அடைகிறார்.


மேலும் மஹாவின் கன்னத்தில் அவர் ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதனால் மஹால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்