ராஜலக்ஷ்மி மனதை மாற்றிய மஹா.! சந்தோஷத்தில் மஹாவை தூக்கி சுற்றிய சூர்யா.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராஜலட்சுமி சூர்யாவிடம் பேசியதால் மகிழ்ச்சியில் இருக்கும் சூர்யா மகாவை தூக்கி சுத்தி கொண்டிருக்கிறார். இதனால் இருவரும் விரைவில் இணைந்து கணவன் மனைவிகளாக வாழத் தொடங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் சூர்யா ஏழைப் பெண்ணாக இருக்கும் மகாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமிக்கு சிறிதும் விருப்பமில்லை. கடைசி நேரத்தில் நடந்த குழப்பங்கள் காரணமாக சூர்யா மகா திருமணம் நடைபெறுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜலக்ஷ்மி மனதை மாற்றிய மஹா.! சந்தோஷத்தில் மஹாவை தூக்கி சுற்றிய சூர்யா.! ப்ரோமோ இதோ.! 1

திருமணத்திற்கு பின்னர் சூர்யாவும் மகாவும் கணவன் மனைவிகளாக வாழாமலேயே இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சூர்யாவின் தாத்தாவான வேதாச்சலத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர் தனது வாழ்வின் கடைசி ஆசையாக சூர்யாவும் மகாவும் இணைந்து வாழ வேண்டும் என்று சூர்யாவிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இதனால் சூர்யா தாத்தாவிற்காக மகாவிடம் நெருக்கமாக இருப்பது போல் நடித்து வருகிறார். இதை பார்க்கும் ராஜலட்சுமி சூர்யாவிடம் சரியாக பேசுவதில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் போது சூர்யாவும் ராஜலட்சுமியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிக் கொள்கின்றனர்.


இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற சூர்யா மகாவை தூக்கி சுத்திக் கொண்டிருக்கிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் சூர்யா மகா இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்