சேர்ந்து வாழ வித்தியாசமான பரிகாரம் செய்யும் சூர்யா மஹா.! செம்ம Cute ஆன ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக தற்போது சூர்யாவும் மகாவும் இணைந்து ஒரு பரிகாரம் ஒன்றை செய்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது காமெடியாக வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

சேர்ந்து வாழ வித்தியாசமான பரிகாரம் செய்யும் சூர்யா மஹா.! செம்ம Cute ஆன ப்ரோமோ.! 1
காச்சோரா என்னும் பெங்காலி தொடரை அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பபு செய்து வருகிறது. இதில் மௌனிகா, விக்ரம் ஸ்ரீ, அக்ஷய், காயத்ரி ஸ்ரீ ஆகிய பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கை கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்கிறார். அந்த மாப்பிள்ளை வசதியான இடம் என்பதால் அந்தப் பெண் அந்த வீட்டில் பல கொடுமைகளை அனுபவிக்கிறார். பின்னர் என்ன நடந்தது? அந்த பெண் அனைத்தையும் சகித்துக் கொண்டு அந்த கணவருடன் இணைந்து வாழ்கிறாரா? என்பது குறித்த கதையாக இது இருந்து வருகிறது.


தற்போது கதைப்படி மகா தனக்கும் தன்னுடைய அக்கா திருமணத்தன்று ஓடிப் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதனால் சூர்யாவிற்கு மகா மீது தற்போது கரிசனம் ஏற்பட்டிருக்கிறது. அதை நிரூபித்தால் மகாவுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு பரிகாரம் ஒன்றை செய்கின்றனர். அதில் சூர்யாவின் வேட்டியையும் மஹாவின் சேலையும் முந்தானையும் முடியப்பட்டு இருவரும் பேசிக் கொள்ளாமல் மௌன விரதம் இருக்க வேண்டும் என்று ஜோசியர் கூறுகிறார்.

அதன்படியே இருவரும் இணைந்து இந்த பரிகாரத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது மகாவுக்கும் சூரியாவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்