“என்ன எப்படியாவது காப்பாத்து மஹா” மஹாவிடம் கதறி அழும் ஐஸ்வர்யா.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஐஸ்வர்யா மகாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இதனால் தனது அக்காவை காப்பாற்றுவதற்காக சூர்யாவிடம் மகா உதவி கேட்கிறார். ஆனால் சூர்யா உதவி செய்ய மறுத்து விடுவதால், தானே தனது அக்கா ஐஸ்வர்யாவை காப்பாற்றுவேன் என சபதம் எடுத்துக்கொண்டு மகா கிளம்புகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்ன எப்படியாவது காப்பாத்து மஹா" மஹாவிடம் கதறி அழும் ஐஸ்வர்யா.! ப்ரோமோ இதோ 1

ஐஸ்வர்யா முன்பு ஒரு முறை மாடலாக இருந்தபோது கவர்ச்சியாக ஒருவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்் அந்த புகைப்படங்களை தற்போது ஐஸ்வர்யாவின் கணவர் கௌதம் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் மறைமுகமாக காட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது மகாவுக்கும் அந்த புகைப்படங்கள் கண்ணில் படுகிறது. இதை ஐஸ்வர்யாவிடம் சென்று மகா கேட்கிறார். அப்போதே மகாவின் கைகளை பிடித்துக் கொண்டு அழும் ஐஸ்வர்யா, அவன் இந்த புகைப்படங்களை வைத்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறான். இந்த சூழ்ச்சியிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்று என கெஞ்சி கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யாவை நம்பும் மகா, சூர்யாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் சூர்யா ஐஸ்வர்யா கூறுவது அனைத்துமே பொய்யாக தான் இருக்கும் என உதவி செய்ய மறுத்து விடுகிறார். எனவே இந்த சூழ்ச்சியிலிருந்து எனது அக்கா ஐஸ்வர்யாவை நான் எப்படியாவது காப்பாற்றுவேன் என மகா சூளுரைத்து அங்கிருந்து வெளியேறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்