ஐஸ்வர்யாவை தேடி திரியும் மஹா சூர்யா.! ரவுடியை திருமணம் செய்ய போகும் ஐஸ்வர்யா?

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் எங்கு தேடியும் ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த திருமணத்தை நிறுத்த கௌதமின் தாயார் சித்ரா கூறுகிறார். மறுபுறம் ஐஸ்வர்யாவை கடத்திச் சென்ற நபர் ஐஸ்வர்யாவுடன் திருமண மேடையில் அமர்ந்திருப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது ஆஹா கல்யாணம் தொடர். இன்றைய ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை கூட்டிக்கொண்டு வரச் சொல்ல மஹா ஐஸ்வர்யா இல்லை என்கிற விஷயத்தை கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவை தேடி திரியும் மஹா சூர்யா.! ரவுடியை திருமணம் செய்ய போகும் ஐஸ்வர்யா? 1

பல இடங்களில் தேடியும் ஐஸ்வர்யாவை காணவில்லை என்று மஹா கூறுகிறார். அதை கேட்ட ஐஸ்வர்யாவின் தாய் கோடீஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். அப்போது கௌதமரின் தாயார் சித்ரா இதுபோலத்தான் சூர்யாவின் திருமணத்திலும் ஐஸ்வர்யா காணாமல் போனார். அவருக்கு கல்யாணத்தை விட்டு ஓடுவது தானே வேலை என்று கூறுகிறார். இதைக் கேட்ட மஹா கலங்கிப் போகிறார். பின்னர் மஹாவும் சூர்யாவும் ஐஸ்வர்யாவை தேடி காரில் புறப்பட்டு செல்கின்றனர். இதற்கிடையில் கௌதமை மணமேடையிலிருந்து எழுந்திருக்குமாறும் இந்த திருமணம் நடைபெறாது என்று கௌதமின் தாயார் சித்ரா கூறிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் சித்ராவை கடத்திக் கொண்டு சென்ற நபருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் ஐஸ்வர்யாவை சூர்யாவும் மஹாவும் காப்பாற்றி அழைத்து வருவார்களா? இல்லை கடத்திக்கொண்டு சென்ற நபருடன் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடக்குமா? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்