9 வயசுல இருந்து பாடுறேன்..இப்பதான் ஒரு கார் வாங்க முடிஞ்சுது.. கடின உழைப்பால் புது கார் வாங்கிய ஆஜித்

வெளியிட்டது

சமீப காலமாக விஜய் டிவியில் வரும் பிரபலங்கள் பலரும் கார் வாங்கி வருகின்றனர். நேற்று கூட மைனா நந்தினி தனது புது கார் வீடியோவை தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இதற்கு முன்பாக சித்து ஒரு கார் ஒன்றை வாங்கி தனது மனைவி ஸ்ரேயாவுக்கு பரிசளித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, குக் வித் கோமாளி மணிமேகலை, புகழ், சின்னத்திரை நட்சத்திர ஜோடிகள் ஆல்யா மானசா, சஞ்சீவ் போன்ற பிரபலங்கள் சொகுசு கார்களை வாங்கியிருந்தனர். அந்த வரிசையில் தற்போது சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்தும் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆஜித்.

9 வயசுல இருந்து பாடுறேன்..இப்பதான் ஒரு கார் வாங்க முடிஞ்சுது.. கடின உழைப்பால் புது கார் வாங்கிய ஆஜித் 1

இவர் குழந்தையாக இருந்த போதே சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு பாடி முதல் பரிசை பெற்றார். இவர் அணிந்து வரும் உடையும் இவரின் அழகான முகபாவனைகளும், நன்றாக பாடும் திறமையும் மக்களுக்கு பிடித்திருந்தால் அந்த சீசனில் இவர் முதலிடத்தை பெற்றார். அதற்கு பின்னர் பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்பம் பாடி பதிவேற்றுவது என்று ஆக்டிவாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சுவாரஸ்யம் இல்லாத நபராக இருந்த போதிலும் மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர் பின்னர் ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் முற்றிலும் குறைந்த போது இவரை குறைந்த வாக்குகளை அளித்து வெளியேற்றினர்.

இவருடன் பிக் பாஸில் நட்பாக இருந்தவர் கேபி என்கிற கேபிரியல்லா. விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர் 3 படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இவர் ஜோடி நம்பர் ஒன்னில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருந்தார். பிக்பாஸ்க்கு பிறகு கேபியும் ஆஜித்தும் பல நடன வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவேற்றி வரும் ஆஜித் தற்போது ஒரு புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விலை உயர்ந்த ஸ்கோடா ஸ்லாவியா ரக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த காரின் விலை 22 லட்சம் ஆகும் தற்போது ஆஜித்துக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்