Categories: சினிமா

ஆஜீத்துக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.! முன்னணி இயக்குனர் மற்றும் மாஸ் நடிகர் படத்தில் இணைந்த ஆஜீத்..

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் ஆஜித். இவர் குழந்தையாக இருந்த போதே சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு பாடி முதல் பரிசை பெற்றார். இவர் அணிந்து வரும் உடையும் இவரின் அழகான முகபாவனைகளும், நன்றாக பாடும் திறமையும் மக்களுக்கு பிடித்திருந்தால் அந்த சீசனில் இவர் முதலிடத்தை பெற்றார். அதற்கு பின்னர் பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்பம் பாடி பதிவேற்றுவது என்று ஆக்டிவாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சுவாரஸ்யம் இல்லாத நபராக இருந்த போதிலும் மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் முற்றிலும் குறைந்த போது இவரை குறைந்த வாக்குகளை அளித்து வெளியேற்றினர்.

ஆஜீத்துக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.! முன்னணி இயக்குனர் மற்றும் மாஸ் நடிகர் படத்தில் இணைந்த ஆஜீத்.. 1

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு பிக்பாஸில் தனக்கு நண்பராக இருந்த கேபியுடன் இணைந்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வந்தார். கேபியும் ஆஜீத்தும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும், இருவரும் காதலிப்பதாக வெளியே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அஜித் மற்றும் கேபி இருவரும் நடனங்களை ஆடியும் ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி அதை தனது youtube பக்கத்தில் பதிவேற்றி இருந்தார் ஆஜித். எட்டு வயதில் இருந்து பாடுவதாகவும், தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தற்போது தான் ஒரு காரை வாங்க முடிந்தது என்றும் வருத்தத்துடன் அந்த வீடியோவில் பேசியிருந்தார் ஆஜித். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் ஆஜித் முன்னணி நடிகரான தனுஷின் படத்தில் இணைவது பற்றி தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். நானே வருவேன் என்று அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இந்திரஜா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரபு யோகி பாபு செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் செல்வராகவன் ஆஜித்தை தனது படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆஜித் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்