‘வா தமிழா வா’ நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய கரு. பழனியப்பன்.! இவருக்கு பதில் இவர்.!

வெளியிட்டது

கலைஞர் டிவியில் ‘வா தமிழா வா’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு.பழனியப்பன் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்த அவர், சில சர்ச்சைகள் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது அந்த நிகழ்ச்சியை பிரபல யூடியூபராக இருக்கும் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'வா தமிழா வா' நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய கரு. பழனியப்பன்.! இவருக்கு பதில் இவர்.! 1

“‘திராவிடம்’ என்ற சொல் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என்றால் அங்கிருந்து வெளியேறி விடுவது தான் நியாயம்” என்று சொல்லி அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக ‘வா தமிழா வா’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அதிலிருந்தும் விலகி இருக்கிறார். அரசியல், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் பணியாற்றி வரும் அவர், “நான் விலகியதற்கு எந்த சர்ச்சைக்குரிய காரணமும் இல்லை. பணிச்சுமை காரணமாகவே விலகி இருக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த புது ப்ரோமோ ஒன்றை கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. அதில், “பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இந்த நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்குவார்” என்கிற அறிவிப்புடன் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Kalaignar TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்