“இதுக்கெல்லாமா பொதுவெளியில கேள்வி கேட்டு முடிவு பண்ணுவாங்க”!!”இன்ஸ்டாவில் அபிராமியின் ஆர்வக்கோளாறு செயல்”!!

வெளியிட்டது

தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சி பல்வேறு வகையிலும் முன்மாதிரியான நிகழ்ச்சியே. பல்வேறான எதிர்மறையான கருத்துக்கள் மக்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மேல் இருப்பினும் இதுவே மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி.  இதனை யாராலும் மறுக்க முடியாது. அதனாலேயே இதன் ஒளிபரப்பாக 6வது சீசன் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகும் போதும் வைரலாகிறது.

"இதுக்கெல்லாமா பொதுவெளியில கேள்வி கேட்டு முடிவு பண்ணுவாங்க"!!"இன்ஸ்டாவில் அபிராமியின் ஆர்வக்கோளாறு செயல்"!! 1

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றாலும் முக்கியத்துவம் பெறுகிறார்கள் பலர்.  நடிகர் ஹரிஷ் கல்யாண், ரைசா, ஜூலி, வனிதா, லாஸ்லியா, தர்ஷன், கவின் என பலர் மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர்கள். இதில் மற்றொரு முக்கியமான நபர் அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

சன் டிவியில் ‘ஸ்டார் வார்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இவர், ஒரு பாரத நடன கலைஞரும் கூட. பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்த மிக பெரிய அறிமுகம் இவர், தமிழில் வெளியான நடிகர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” படத்தில் 3 நாயகிகளில் ஒருவர் நடித்து நல்ல விமர்சங்களை பெற்றார். படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் இன்ஸ்டாகிராம், போது நிகழ்ச்சிகள், சமூகவலைத்தளங்களில் மூலமாக மக்களிடம் எப்போதும் பரீட்சையபட்டுக்கொண்டே இருக்கிறார். மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிக பெரிய சர்ச்சைகளை உருவாக்கினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் எப்போதும் புகைப்படங்களை கொஞ்ச கவர்ச்சியாக வெளியிட்டு அதன் மூலம் நிறைய ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

பிரபலங்கள் சிலர், சில விஷயங்கள் பற்றி தங்களுடைய சமூகவலைத்தளங்கில் கேள்விகள் கேட்பார்கள். சிலர் வாக்கெடுப்புகளும் நடத்துவார்கள். அண்மையில் அபிராமியும் இது போன்ற ஒரு வாக்கெடுப்பை நடத்தியுள்ளார். அதில் தன்னுடைய மூக்கில் வளையம் போட்டுக்கொள்ளலாமா? என்பதை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இவரே நிறைய பேர் இதற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுக்க “நான் நிச்சயம் மூக்கில் வளையம் போட்டுக்கொண்டு அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  ரசிகர்கள் சிலர் இதற்கெல்லாமா வாக்கெடுப்பு நடத்துவாங்க.. என்ன கொடுமை சார் இது என கிண்டலடித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்