வயசான காலத்துல போய் ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி.! குட்டி பத்மினியை விளாசிய அபிராமி வெங்கடாச்சலம்.!

வெளியிட்டது

கலாஷேத்ரா விவகாரம் சமீப காலமாக பூதாகரமாகி இருக்கும் நிலையில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக நடிகை அபிராமி வெங்கடாசலம் கருத்து தெரிவித்தார். அவரை விமர்சித்து குட்டி பத்மினி ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். தற்போது அந்த சர்ச்சை பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. சென்னையில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கலைப் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லையை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் புகார் அளிக்கப்பட்ட ஆசிரியர் ஹரி பத்மன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் கைதான ஆசிரியர் ஹரிபத்மனுக்கு ஆதரவாக அபிராமி வெங்கடாச்சலம் கருத்து தெரிவித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

வயசான காலத்துல போய் ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி.! குட்டி பத்மினியை விளாசிய அபிராமி வெங்கடாச்சலம்.! 1

அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி என்கிற அடிப்படையில் அவர் ஹரி பத்மநாபன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டும் என்றும், தான் அந்த கல்லூரியில் தான் பயின்றேன் அப்பொழுதெல்லாம் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் பேட்டி அளித்து இருந்தார்.பாலியல் புகாரில் சிக்கியவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அபிராமிக்கு எதிராக கண்டனங்கள் எழத் தொடங்கியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அதே கல்லூரியில் தான் படித்தேன். அப்பொழுதெல்லாம் இதுபோன்று நடந்ததில்லை, ஹரி பத்மன் மிகவும் நல்லவர் என்று பேசியிருந்தார். இதனால் அபிராமிக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பலரும் தெரிவித்த நிலையில் நடிகை குட்டி பத்மினியும் அபிராமிக்கு எதிராக நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசி இருந்தார். நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த ஃபீலும் இருக்காது, ஆனால் மற்ற பெண்களுக்கு அப்படியா என்று நடிகை குட்டி பத்மினி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தற்போது அபிராமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களைப்போல இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆன்ட்டி. உங்களுக்கு எந்த ஃபீலிங்கும் வரவில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஒன் மோர் விஷயம் உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா நல்ல குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆன்ட்டி? நாங்க பார்த்துக்கிறோம் ஆன்ட்டி. இந்த வயதான காலத்தில் நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று குட்டி பத்மினிக்கு அபிராமி காட்டமான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார். இதன் மூலமாக குட்டி பத்மினி நல்ல குடும்பத்தில் பிறக்கவில்லையா என்ற ரீதியல் அபிராமி பதிவிட்டுள்ளாரா? என்ற ரீதியில் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: KPTV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்