Categories: சினிமா

ராமராஜன் நளினி விவாகரத்துக்கு நான்தான் காரணம்னு – மனம் திறந்து பேசிய அபிதா

வெளியிட்டது

தனக்கும் ராமராஜனுக்கும் தொடர்பு இருந்ததால்தான் நளினி ராமராஜனை விவாகரத்து செய்து விட்டதாக பலர் அப்போது கிளப்பி விட்டனர் என்று திருமதி செல்வம் சீரியல் நடிகை அபிதா தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 90களின் முன்னணி நாயகனாக இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய லெவலில் ஹிட்டானது. குறிப்பாக கரகாட்டக்காரன் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும் அந்த படத்தில் வரும் பாடல்களை மக்கள் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். அதில் வரும் வாழைப்பழம் காமெடி இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் ராமராஜன் மற்றும் நளினிக்கு விவாகரத்து நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். விவாகரத்து ஆனபோதிலும் மகன் மற்றும் மகள் திருமணத்தை இருவரும் ஒன்றாக இணைந்து நடத்தி வைத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமராஜன் நளினி விவாகரத்துக்கு நான்தான் காரணம்னு - மனம் திறந்து பேசிய அபிதா 1

நளினி மற்றும் ராமராஜன் இருவரும் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ராமராஜன் அதிமுகவில் பிரச்சார அணியில் இருக்கிறார். நளினி தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒரு தொடரில் நடித்து வருகிறார் நளினி. இந்த நிலையில் ராமராஜன் நளினி பிரிவிற்கு திருமதி செல்வம் நடிகை அபிதா தான் என்று வதந்தி கிளம்பியது. ராமராஜனும் அபிதாவும் இணைந்து சீறிவரும் காளை என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போது இவர்கள் நெருக்கமாக இருந்ததால் தான் நளினி ராமராஜனை விவாகரத்து செய்து விட்டார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபிதாவே ஒரு பேட்டியில் விளக்கி இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது, தனக்கு ராமராஜன் உடன் நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு ஹோம்லி கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்காக ஒப்பு கொண்டு விட்டேன். ஷூட்டிங்கில் நடிப்பேன் பின்னர் சூட்டிங் முடிந்ததும் நான் என் வேலையை பார்த்து சென்று விடுவேன். நான் நளினியை நேரில் பார்த்தது கூட கிடையாது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நளினி வந்தது கூட இல்லை.

ராமராஜனுடன் அவ்வளவாக பேசியதும் கிடையாது. என்னுடைய ஷாட்டுகள் முடிந்த பின்னர் நான் எனது அறைக்கு சென்று விடுவேன், ஆனால் என்னால் தான் நளினியும் ராமராஜனும் பிரிந்து விட்டார்கள் என்று தேவையில்லாத வதந்தியை பரப்பி இருந்தார்கள். அது எனக்கு மென்டல் டார்ச்சராக இருந்தது. சரி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போதுதான், தனக்கு திருமதி செல்வம் வாய்ப்பு வந்ததாகவும் அபிதா கூறினார். அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Avalglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்