திருமதி செல்வம் அர்ச்சனாவ ஞாபகம் இருக்கா? 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அபிதா

வெளியிட்டது

பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான படம் சேது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அபிதா குஜலாம்பாள் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் அபிதா. சேது படத்திற்கு பின்னர் இவருக்கு எந்தவொரு படமும் வெற்றியடையவில்லை. சீறி வரும் காளை, பூவே பெண் பூவே என்ற படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். பின்னாளில் சீரியலில் தலைக்காட்டத் தொடங்கினார் அபிதா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2007ம் ஆண்டு வெளியான இந்த தொடர் மக்களின் பேராதரவுடன் 2012ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

திருமதி செல்வம் அர்ச்சனாவ ஞாபகம் இருக்கா? 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அபிதா 1

இந்த சீரியலில் அபிதாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தவர் சஞ்சீவ். விஜயின் நண்பரான இவர் சில படங்களில் நடித்திருந்த போதிலும்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்தார். திருமதி செல்வம் சீரியல் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவருக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்து இருந்தது. 2009ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்பு சீரியலில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தொடர் முத்தாரம். பின்னர் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் சீரியலில் நடிப்பதிலிருந்து முற்றிலும் விலகிக் கொண்டார்.

பின்னர் எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது. கடைசியாக அளித்த பேட்டியில் வெளிநாட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள மாரி என்ற சீரியலில் நடிக்க உள்ளார். பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரமாக மாரி என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார். தனது யதார்த்தமான நடிப்பால் பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொண்ட அபிதா இந்த சீரியலிலும் கலக்குவார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  Twitter Original Source From: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்