Categories: சமூகம்

2014-2018 வரை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 2220

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 2220 வீரர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2014-2018 வரை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை 2220 1

எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) ஆகிய ஐந்து பாதுகாப்பு படைகளில் இருந்து கிடைக்க பெற்ற தகவல்கள் அடிப்படையில் தேசிய குற்ற ஆவணக் காப்பாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இது போன்ற சம்பவங்கள் குறைந்து வருவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பாகம் கூறியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மரணம் குறித்து திறக்கப்பட்ட ஆய்வில், விபத்துகள் மூலம் 1,232 பேரும், தற்கொலைகள் மூலம் 175 பேரும் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான குறிப்பில், சிஏபிஎப் பிரிவில் விபத்துக்கள் மூலம் 104 வீரர்களும், தற்கொலைகள் மூலம் 28 என 132 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளின் வீரர்களின் உயிரிழப்பு கனிசமாக குறைந்துள்ளது. 

2018 ஆம் ஆண்டில்  ஒட்டுமொத்தமாக, 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

விபத்து தொடர்பான இறப்புகளில் 2017இல் 113 ஆகவும், 2016இல் 260 ஆகவும், 2015இல் 193 ஆகவும் இருந்தது. தற்கொலை தொடர்பான இறப்புகளில் 2017இல் 60 ஆகவும், 2016இல் 74 ஆகவும், 2015இல் 60 ஆகவும் இருந்துள்ளது. 

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்