Categories: சமூகம்

சேலத்தில் அதிரடி ஆஃபர்! ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்!!

வெளியிட்டது
சேலத்தில் அதிரடி ஆஃபர்! ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்!! 1

சேலம் மாவட்டத்தில் கோட்டையில், ஹெல்மெட் ஒன்று வாங்கினால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள கடையில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பெரிய வெங்காயத்தின் நாடு முழுவதும் விலை உச்சத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெளிநாட்டு வெங்காயம் இறக்குமதி, உள்நாட்டு வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக விலை குறைந்து, தற்போது ஒரு கிலோ 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, விலையேற்றத்தை பயன்படுத்தி செல்போன், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால், இலவசமாக வெங்காயம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சேலம் கோட்டை பகுதியில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் கடை வைத்துள்ளார். தனது கடையில் ஹெல்மெட் வாங்கினால், ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவதாக, அறிவித்தார். இந்த தகவல் பரவியதும், நேற்று ஏராளமானோர் கடைக்கு சென்று ஆர்வத்துடன் ஹெல்மெட் வாங்கிச் சென்றனர் கூடவே வெங்காயத்தை இலவசமாக பெற்று கொண்டனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்