Categories: சினிமா

பாரிஸில் செம்ம ரொமென்ஸ்..! வைரலாகும் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி கியூட்டான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

மிருகம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் ஆதி. இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த ஈரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்று கொடுத்தது. முதல் படமான மிருகம் படம் இவருக்கு வெற்றிபெறாவிட்டாலும், இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டி எடுத்து இருந்தார் நடிகர் ஆதி. ஈரம் படத்திற்கு பிறகு முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார்.

பாரிஸில் செம்ம ரொமென்ஸ்..! வைரலாகும் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி கியூட்டான புகைப்படங்கள்..! 1

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பிறகு ஆதி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார். கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் வாரியார் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். மரகத நாணயம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் விடுமுறைக்காக பாரிஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்த செம்ம ரொமேன்டிக்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக பதிவிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் செம்ம கியூட்டாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்