காதலியை கரம் பிடித்தார் ‘வானத்தைப் போல’ சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்.! திருமண ஆல்பம் இதோ.!

வெளியிட்டது

‘வானத்தைப்போல’ சீரியலில் ராஜபாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்திக்குக்கும், அவரது காதலிக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

காதலியை கரம் பிடித்தார் 'வானத்தைப் போல' சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்.! திருமண ஆல்பம் இதோ.! 1

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று சீரியலில் நடித்து வருபவர் நடிகர் அஸ்வின் கார்த்திக். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ‘சரவணன் மீனாட்சி’ என்கின்ற சீரியல் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

முதல் சீரியலிலே நல்ல வரவேற்ப்புப் பெற்ற இவருக்கு, தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அரண்மனைக்கிளி’, ‘றெக்க கட்டி பறந்த மனசு’, ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘குலதெய்வம்’, ‘பிரியமானவள்’ போன்ற பல தொடர்களின் நடித்துள்ளார். ‘எங்கேயும் சமையல்’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப்போல’ சீரியலில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.


இந்த சீரியல் இவருக்கு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. இந்த சீரியலின் மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கி வைத்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் அஸ்வின் கார்த்திக் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணிபுரியும் காயத்ரி என்பவரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.


அவர்களுக்கு வீட்டிலேயே வைத்து எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து இன்று அஸ்வின் கார்த்திக்கும், காயத்ரியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

பலரும் இந்த தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்