Categories: சினிமா

மனைவி Manjima உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் Gautham Karthik..!

வெளியிட்டது

நடிகர் கார்த்திக் மகன் தான் கவுதம் கார்த்திக். தந்தையை போல சினிமாவில் பெரிய நடிகர் ஆக வேண்டும் என சினிமாவுக்குள் வந்தவர். இவர் முதல்படமே தந்தையை போல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடல் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார். இப்படம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெறவே , அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் அமைந்து வருகிறது. தற்போது பல படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மனைவி Manjima உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் Gautham Karthik..! 1

அண்மையில் சிம்புவுடன் சேர்ந்து இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பின்பு மஞ்சிமா படங்கள் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் இன்று ஓணம் பண்டிகையை வீட்டில் கொண்டாடி உள்ளார். மனைவியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது ஓணம் வாழ்த்துக்களை கூறி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்