ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போதுவரை படம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு அடுத்ததாக பிரதர் படம் வெளியாக உள்ளது.அடுத்தடுத்து நல்ல கதைகளை கேட்டு ஜெயம் ரவி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு நடிகர் ஜெயம் ரவி இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தனது இயக்கத்தில் நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். நடிப்பில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் ஜெயம் ரவி, இயக்கத்திலும் ரசிகர்களை கவர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உருவாகி இருக்கிறது.