பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் தான் ஜீவா. தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்து உள்ளார். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்கள் நடித்து வந்தார்.

சமீபகாலமாக ஜீவாவுக்கு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு ஜீவா நடித்து வருகிறார். ஒரு காலத்தில் கோ, ராம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தற்போது வெற்றிக்காக போராடி வருகிறார். இந்நிலையில் இவரது கார் தற்போது விபத்தில் சிக்கி உள்ளது. சேலத்தில் இருந்து மனைவியுடன் சென்னைக்கு ஜீவா காரில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது சின்னசேலம் பகுதி அருகே ஒரு பைக் குறுக்கே வந்ததால் அவர் மீது மோதிவிட கூடாது என்பதற்காக நடிகர் ஜீவா சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி உள்ளார். இதில் ஜீவா காரின் முன் பக்கம் பயங்கர சேதமாகியது. நல்வாய்ப்பாக இருவரும் உயிர் தப்பிய நிலையில், ஜீவா அங்கிருந்து உடனடியாக வேறு காரில் கிளம்பி சென்று உள்ளார்.