தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடித்துள்ளவர் நடிகர் கார்த்தி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தற்போது இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில், மெய்யழகன் படத்தில் நடித்து உள்ளார். இப்படம் தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு பட நிகழ்ச்சிக்காக சென்ற இவரிடம் லட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, லட்டு தற்போது சென்சிடிவ் விஷயமாக போய் வருகிறது அதை பற்றி பேச வேண்டாம் என கூறி இருந்தார். இதனை பார்த்த அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், லட்டு வைத்து இதுபோன்று நடிகர்கள் பேசுவது வருத்தமளிப்பதாகவும், சனாதன தர்மம் குறித்த இந்த பேச்சை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பவன்கல்யானிடம் தான் தவறாக பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளுமாறு கூறி உள்ளார்.இவரின் மன்னிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.செய்யாத குற்றத்திற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.