முன்னணி நடிகராக சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துக்கொண்டுள்ளவர் ரோபோ சங்கர். இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு வந்த இவர் தற்போது தனது கடின உழைப்பினால் உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார். பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் ரோபோ சங்கர்.

இவரை போல தற்போது தனது மகள் இந்திரஜாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார். பிகில் படத்தில் நடித்து இந்திரஜா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் விருமன் படத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார் இவர். தற்போது அண்மையில் மகளின் திருமணத்தை ரோபோ சங்கர் கோலாகலமாக நடத்தி இருந்தார். தற்போது இவர்களுக்கு குழந்தையும் பிறக்க இருக்கிறது.
தற்போது நடிகர் மயில்சாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் ரோபோசங்கர் குடும்பத்துடன் அன்னதானம் வழங்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கரின் செயலை ரசிகர்கள் பெரிதளவு பாராட்டி வருகின்றனர்.