கேரளா சினிமாவில் நடிகர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். இது இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி நடிகர்கள் இந்த பாலியல் புகாரில் சிக்கி உள்ளனர். இதனால் கேரளா அரசு முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது நடிகர் மோகன் லால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். மேலும் இவரை தொடர்ந்து பலரும் ராஜினாமா செய்ததால் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நடிகை பார்வதி திருவொத்து, மோகன் லாலை கோழை என விமர்சனம் செய்து இருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருந்தது.
தற்போது இதற்கு நடிகர் மோகன்லால் பதில் அளித்து உள்ளார். அதில், ஹேமா கமிட்டியில் என்ன நடக்கிறது என்று தனக்கு தெரியாது எனவும் ,மலையாள சினிமாவை இந்த பிரச்னையில் இருந்து காக்க வேண்டும் . பல சினிமா சங்கங்கள் இருக்கும் பொழுது அம்மா சங்கத்தை மட்டும் ஏன் கூற வேண்டும் , நான் எங்கும் ஓடிபோகவில்லை என அவர் நடிகை பார்வதிக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.