உதவி இயக்குனரை அடித்த சர்ச்சை.. பணத்தை கொடுத்து சமரசம் செய்த நவீன்? அவரே கொடுத்த விளக்கம்

வெளியிட்டது

சின்னத்திரை நடிகர் நவீன் குமார் உதவி இயக்குனரை தாக்கிய விஷயத்தில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளது. உதவி இயக்குனரை தாக்கிய வழக்கில் அவரது சிகிச்சைக்கு பணம் கொடுத்து பிரச்சினையை முடித்துள்ளார் நடிகர் நவீன். ஆரம்பத்தில் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்த நவீனுக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இதயத்தை திருடாதே சீரியல் முடிவு பெற்ற பிறகு அவருக்கும் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் அவருக்கு அதே தொலைக்காட்சியில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் திடீரென நவீன் இந்த சீரியலின் உதவி இயக்குனரை தாக்கியதாக தகவல்கள் வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவி இயக்குனரை அடித்த சர்ச்சை.. பணத்தை கொடுத்து சமரசம் செய்த நவீன்? அவரே கொடுத்த விளக்கம் 1

உதவி இயக்குனர் குலசேகரன் என்பவர், மதிய உணவு இடைவேளைக்குச் சென்று ஷூட்டிங் இருக்கு வராமல், தனது அறையிலேயே இருந்த நவீனை ஷூட்டிங்க்கு வருமாறு அழைத்ததாகவும், அதனால் வாக்குவாதம் முற்றி நவீன் உதவி இயக்குனர் குலசேகரனை கடுமையாக தாக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அவர் சின்னத்திரை சங்கத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். கண்களுக்கு கீழ் கடுமையான காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் சீரியல் டீம். இந்த நிலையில் நவீன் இதுகுறித்த ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது ஷூட்டிங்கிற்கு அழைத்ததால் ஏற்பட்ட பிரச்சனை இல்லை. ஒரு சீன் தொடர்பாக நடந்த வாக்குவாதம் தான் இதற்கு எல்லாம் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒரு சீன் தொடர்பாக அவர் என்னிடம் ஒரு கருத்தை கூறினார். நான் அது தவறாக கூறுகிறீர்கள் என்று சொன்னேன். அது வாக்குவாதமாக மாறியது. அப்போது அவர்தான் முதலில் என்னை அடிக்க வந்தார். நான் தடுத்ததால் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த இடத்திற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு வந்த நான், ஒரே நாளில் என் பெயரை கெடுத்துக் கொள்வேனா? அவருக்கு பணம் கொடுத்தது உண்மைதான் அவரது சிகிச்சைக்காக தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று நடிகர் நவீன் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..

Youtube video code embed credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்