Categories: சினிமா

நடுக்கடலில் கப்பலில் வைத்து மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நெப்போலியன்.!

வெளியிட்டது

நடிகர் நெப்போலியன் தற்போது தனது மகனின் 25-வது பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் நெப்போலியன் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடுக்கடலில் கப்பலில் வைத்து மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நெப்போலியன்.! 1

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து முடித்த அவர் பின்னாளில் திரைத்துறையிலிருந்து முற்றிலுமாக விலகி இருந்தார். 27 ஆம் வயதில் உதயம் என்கிற படத்தை பார்த்து நடிப்பதில் ஆர்வம் வந்த அவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்தார்.


1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான அவர் பின்னாளில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருந்தார். இவர் நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி இன்றளவும் பேசும் திரைப்படமாக இருந்து வருகிறது.

பின்னர் அரசியலில் குதித்த அவர், திமுகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பிறகு திமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்ற அவர் அங்கிருந்தும் விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மிகப்பெரிய ஐடி நிறுவனம் ஒன்றைய நடத்தி வரும் நெப்போலியனுக்கு திருமணம் ஆகி ஜெயசுதா என்கிற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்கிற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இதில் மூத்த மகன் தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தார். பின்னர் சென்று வருவது சிரமமாக இருந்ததால் கடல் போன்ற வீடு ஒன்றை வாங்கி அங்கேயே குடியமர்ந்து விட்டார் நெப்போலியன்.

இவரின் ஹோம் டூர் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலான நிலையில், அடிக்கடி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பிறந்த நாட்களை அவ்வப்போது கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டாடி இருக்கிறார்.

இந்த நிலையில் தனது மூத்த மகன் தனுஷின் 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் தனுஷின் பிறந்தநாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் குணம் பெற்று வர வேண்டும் என்றும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்