நெப்போலியனின் அமெரிக்கா வீட்டை பார்த்து இருக்கீங்களா? இதோ ஹோம் டூர் வீடியோ.!

வெளியிட்டது

நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 12,000 சதுர அடியில் கட்டப்பட்ட அந்த வீட்டை பார்த்த அனைவரும் வாயடைத்து போய் இருக்கின்றனர். மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் நீச்சல் குளம், தியேட்டர், பார் செட்டப், பேஸ்கட் பால் அரங்கம் என்று மிகப்பெரிய அளவில் அந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

நெப்போலியனின் அமெரிக்கா வீட்டை பார்த்து இருக்கீங்களா? இதோ ஹோம் டூர் வீடியோ.! 1

பல வசதிகளுடன் கூடிய அந்த வீடு நம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது. தமிழின் ஒரு காலத்தில் கிராமத்து கதைகளில் நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். திருச்சியில் பிறந்து வளர்ந்த இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் இருந்து வந்தார்.


திமுகவில் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் தமிழில் வெளியான புது நெல்லு புது நாத்து என்கிற படத்தின் மூலமாக 1991 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்பு இவ்வாறு சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். இவர் மொத்தம் 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.


பின்னர் இவர. தாயகம், சுயம்வரம் விருமாண்டி, தசாவதார,ம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனாக இவரது நடிப்பு பிரமிக்க வைத்தது. இவர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான அன்பறிவு படத்தில் முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். 2010ம் ஆண்டுக்குப் பின் முழுவதுமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.


மூத்த மகன் தனுஷ் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவரால் நடக்க முடியாது. வீல்சேரிலேயே இவர் தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வருகிறார். தன்னுடைய மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்று வந்த நெப்போலியன், பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே குடியேறிவிட்டார். 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். 12,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக அந்த வீடு கட்டப்பட்டு இருக்கிறது.


நெப்போலியன் மகன் தனுஷ் பிரபல youtube பிரபலம் இர்ஃபானின் தீவிர ரசிகராம். இர்பான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதனால் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வர ஆசைப்பட்டுள்ளார் தனுஷ். மகனின் ஆசையை நெப்போலியனும் நிறைவேற்றுவதற்காக இர்ஃபானை வீட்டுக்கு அழைத்து வந்து தனது பிரம்மாண்டமான வீட்டை சுற்றிக் காட்டி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது youtube இல் ட்ரெண்டிங்கில் உள்ளது.


தனது மகனுக்காக பார்த்து பார்த்து அந்த வீட்டை அவர் கட்டியிருக்கிறார். அந்த வீடு என்று சொல்லுவதை விட அரண்மனை என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும். வீட்டில் அமைந்த லிப்ட், மகன்களின் படுக்கை அறைகள், நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் படுக்கை அறைகள், மூன்று மாடிக் கொண்ட கட்டிடம், நீச்சல் குளம் சென்று வர குட்டிலிஃப்ட், மாற்றுத் திறனாளி மகனுக்காக அதிநவீன படுக்கை கொண்ட பெட், உயர் ரக குளியலறை, 4 சொகுசு கார்கள், வீட்டிலேயே பார் செட்டப், வீட்டிலேயே தியேட்டர், விளையாடுவதற்காக பேஸ்கெட் பால் கோர்ட் என பன்னிரண்டாயிரம் சதுர அடியில் ஒரு பெரிய அரண்மணியே கட்டியிருக்கிறார் நெப்போலியன்.


அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Irfan’s View

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்