Categories: சினிமா

தல தீபாவளியை கோலாகலகமாக கொண்டாடிய நடிகர் பிரேம்ஜி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. நடிகர் மட்டுமில்லாமல் படங்களில் இசையமைத்தும், பாடியும் வருகிறார். இவரின் குரலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரேம்ஜி.அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்திருந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தல தீபாவளியை கோலாகலகமாக கொண்டாடிய நடிகர் பிரேம்ஜி..! 1

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோட் படத்திலும் நடித்து உள்ளார். இப்படத்திலும் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த இவர் தற்போது காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் , ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அவர் தல தீபாவளியை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்