தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழக கட்சி யை தொடங்கி உள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வந்தனர். கட்சி ஆரம்பித்த நாள் முதலே சட்டமன்ற தேர்தலை சந்திக்க விஜய் வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார் நடிகர் விஜய். இந்த மாநாட்டில் தங்களது கொள்கைகள் என்ன என்பதை நிர்வாகிகளுக்கு தெளிவாக விளக்கி உள்ளார் விஜய். நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பல அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர்,சத்திய நாராயணனிடம் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,நடிகர் விஜயின் அரசியல் வருகையால் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் அவரால் எதுவும் சாதிக்க முடியாது என கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கோபமடைய செய்து உள்ளது.