Categories: சினிமா

இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Rajinikanth..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளது. அண்மையில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Rajinikanth..! வெளியான அதிர்ச்சி தகவல்..! 1

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென இரவோடு இரவாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரான ரத்த ஓட்டம் மற்றும் செரிமான குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதால் ஆஞ்சியோ செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்