தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியாவை தாண்டி ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் பாட்ஷா படத்தை பார்த்த ஜப்பான் ரசிகர்கள் பலரும், இந்தியாவில் இருந்து ஆட்டோவை வாங்கி சென்று ஜப்பானில் ஓட்டி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இவர் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் , ராணா , ரித்திகா சிங் , மஞ்சு வாரியார் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்த நிலையில், அப்பகுதியில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதயநோய் வல்லுநர் சாய் சதீஸ் தலைமையிலான மருத்துவர்கள் ரஜினிக்கு இன்று அதிகாலை முதலே சிகிச்சை அளித்து வந்து உள்ளனர்.தற்போது அவர் அடிவயிற்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் பேசி உள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் 3 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.