Categories: சினிமா

நடிகர் ரமேஷ் திலக்கின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? இவ்வளவு பெரிய பையன் இருக்காரா?

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த இவர், படங்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்க தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் ரமேஷ் திலக்.

நடிகர் ரமேஷ் திலக்கின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா.? இவ்வளவு பெரிய பையன் இருக்காரா? 1

தற்போது முதல் முறையாக தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

திரையுலகில் ஏதாவது சாதித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக பலரும் சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் அவர்கள் பின்னாளில் மிகப்பெரிய நடிகர்களாக உருவெட்டுக்கின்றனர். அந்த வகையில் தற்போது ரேடியோ ஜார்கியாக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர் தான் ரமேஷ் திலக்.


2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்க்கை தொடங்கினார். பின்னர் இவர் மெரினா, சூது கவ்வும், நேரம், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், வேதாளம், கபாலி, காலா, இமைக்கா நொடிகள், விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக காக்கா முட்டை திரைப்படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டதாக இருந்தது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் நைட். இந்த படத்திற்கு பின்னர் ரமேஷ் திலக்கிற்கு மவுசு அதிகமாக இருக்கிறது. பலரும் இவரின் நடிப்பிற்கு ரசிகர்களாக மாறிப் போயிருக்கின்றனர்.

உனக்கு என்னப்பா தண்ணி கேன் போட வந்து இந்த குடும்பத்துல மாப்பிள்ளை ஆகிட்ட என்று மணிகண்டன் இவரைப் பார்த்து கூறும் வசனங்கள் பிரபலமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ரமேஷ் சில தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அவருக்கு நவலட்சுமி என்கிற மனைவியும் மாயன் என்கிற மகனும் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ரமேஷ் திலக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்