தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. ஆரம்பத்தில் வெற்றிக்கு போராடிய சூர்யா இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மட்டுமே ஆகும். தற்போது சூர்யா அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து உள்ளார். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இப்படத்தின் ஹிந்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா அடிக்கடி மும்பை சென்று வருகிறார். அதன்படி விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வால் குடும்பத்தை சந்தித்து பேசி உள்ளார்.
மேலும் காஜல் மகனை கொஞ்சியும் உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மாற்றான் ஜோடி மீண்டும் சந்தித்து இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.