Categories: சினிமா

சிங்கமுத்துவிடம் 5கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகர் வடிவேல்..! அதிரடியாக தீர்ப்பு சொன்ன கோர்ட்..!

வெளியிட்டது

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிங்கமுத்து. இவர் நடிகர் வடிவேலு உடன் பல காமெடிகளில் கலக்கி உள்ளார். இவர்களின் கூட்டணியில் வந்த காமெடிக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிங்கமுத்து, யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்கும் பொழுது, நடிகர் வடிவேலு குறித்து பேசியுள்ளார். இதனை பார்த்த நடிகர் வடிவேலு, சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்தார்.

சிங்கமுத்துவிடம் 5கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகர் வடிவேல்..! அதிரடியாக தீர்ப்பு சொன்ன கோர்ட்..! 1

பொதுமக்கள் மத்தியில் தனது பெயருக்கு சிங்கமுத்து களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.5கோடி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் சிங்கமுத்து தன்னை பற்றி பொது இடங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வடிவேலு மனுவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த விசாரணையின் போது, மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என கோர்ட் ஏற்கனவே சிங்கமுத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மனு விசாரணை மீண்டும் வந்த நிலையில், சிங்கமுத்துவுக்கு பதிலுக்காக ஆஜரான வழக்கறிஞர், வக்காலத்து தாக்கல் செய்ய இருப்பதாக கூறி காலஅவகாசம் கோரி இருந்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, இரண்டு வாரத்திற்குள் வக்காலத்து மற்றும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டு உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்