Categories: சினிமா

அது நான் இல்லை..! இது சலீம் 2 இல்லை..! நடிகர் Vijay Antony பரபரப்பு அறிக்கை..!

வெளியிட்டது

இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர் ஆக உயர்ந்து இருப்பவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதை மற்றும் வித்தியாசமான படத்தின் தலைப்புகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர். இவரின் இசைக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. பல ஹிட் பாடல்களை சினிமாவில் கொடுத்து இளைஞர்களை வைப் ஆக்கியவர் இவர்.

அது நான் இல்லை..! இது சலீம் 2 இல்லை..! நடிகர் Vijay Antony பரபரப்பு அறிக்கை..! 1

தற்போது இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் ஆரம்ப காட்சியில் தன்னை கேட்காமல் 2 நிமிட காட்சி இடம்பெற்று இருப்பதாகவும், அது படத்தை கெடுத்துவிட்டதாகவும் இயக்குனர் விஜய் மில்டன் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சிலர் இதற்கு காரணம் விஜய் ஆண்டனி தான் என கூறி வந்தனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட விஜய் ஆண்டனி, தற்போது படத்தில் இரண்டு நிமிட காட்சியை நான் இணைக்கவில்லை எனவும் அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை என கூறி அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தி இருக்கிறார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்